பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென முதலமைச்சர் உள்ளிட்ட மூவர் கோரியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை மறுதினம் புதன்கிழமை நள்ளிரவுடன் வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவுக்கு வருகின்றது.
இந்நிலையில் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொண்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,
மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் சி.தவராசா உட்பட மூவர், தமக்கு பதவி காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென விண்ணப்பித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.