பதிவிறக்கம் செய்யும் படங்களை 13.8 ஆண்டுகள் சேமிக்க புதிய கண்ணாடி தகடு

நாம் தினந்தோறும் பதிவிறக்கம் செய்யும் படங்களை சேமித்து வைக்க கருவிகளின் சேமிப்பு பற்றவில்லை. நாம் சமுகவலைத்தளங்களிலும், இண்டர்நெட் அப்ளிகேஷன்களிலும் பல ஆயிரக்கணக்கான டேட்டாவை உருவாக்குகிறோம்.

இவை அனைத்தையும் எங்கு சேமிப்பது?  University of Southampton ஆராய்ச்சியாளர்கள் புதிதாக கண்டுப்பிடித்துள்ள கண்ணாடி தகடுதான் இதற்கு பதில். 360 டெரா பைய்ட் டேட்டா வரை 13.8 ஆண்டுகள் வரை இந்த கண்ணாடி தகடில் சேமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த கண்ணாடி தகடை ஃபெம்டோசெகண்ட் லேசர் ரைட்டிங் (Femto Writing) என்ற முறையை கொண்டு உருவாக்கியுள்ளனர்.

அதிவேகமான லேசரின் மூலம் சிறிய ஒளி கதிர்களை ஆழமாக பாய வைத்து கண்ணாடி தகடுகளை உருவாக்குகின்றனர். இந்த ஒளிக்கதிர்கள் ஒரே நேரத்தில் 5 micrometer இடைவெளியில் உள்ள மூன்று அடுக்கில், நானோ முறையில் கட்டமைக்கப்பட்ட புள்ளிகளில் டேட்டாவை பதிவு செய்கின்றன. இதனை 5D discs என்றும் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.  3 அடுக்கில் நானோ புள்ளிகள், அதன் உருவளவு மற்றும் நோக்குநிலை ஆகியவையே இதனை 5D தகடுகளாக்கியுள்ளது.

இந்த தகடுகளில் உள்ள டேட்டாவை ஆப்டிக்கள் மைக்ரோஸோக்ப் உபயோகித்து தான் பார்க்க வேண்டும்.  நூலகம், அருங்காட்சியகம் போல அதீத அளவில் பல வருடங்களுக்கு டேட்டாவை பாதுகாப்பாக சேமித்து வைக்க இந்த 5D தகடு உதவும். மேலும், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்களின் தரவு மையங்களிலும் டேட்டா சேமிக்க இது மிகவும் உதவியாக இருக்கும் என கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.  அதீத அளவு டேட்டா சேமிப்பது மட்டுமில்லாமல் இது 1,000 செல்சியஸ் வரை வெப்பத்தை தாங்கும்.சூப்பர்மேன் படங்களில் வரும் மெமரி கிரிஸ்டல்களை நினைவுப்படுத்தும் வகையில் இதற்கு ”சூப்பர்மேன் மெமரி கிரிஸ்டல்” என்று புனைப்பெயரும் வைத்துள்ளனர்.

இன்டர்நெற்கண்டுபிடிப்புகண்ணாடிகருவிசமூகவலைத்தளம்சேமிப்புதகடுபடங்கள்பதிவிறக்கம்
Comments (0)
Add Comment