பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்துவதை பாகிஸ்தானும், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யும் நிறுத்திக் கொண்டால், தெற்காசியாவின் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய முஸ்லிம்கள் நாட்டுப்பற்று மிக்கவர்கள் என்று குறிப்பிட்ட ராஜ்நாத்சிங், பயங்கரவாத சித்தாந்தங்களை அவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். பயங்கரவாத அமைப்புகளை ஆதரித்து சில இளைஞர்கள் இணையதளங்களில் கருத்து தெரிவிக்கும் விவகாரம் கவலைக்குரிய ஒன்று என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.