இதனால் கோவில் வளாகத்தில் தீப்பிடித்து எரிந்ததில் 90 பேர் பலியாகியுள்ளனர், 200 பேர் காயம் அடைந்துள்ளனர். கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி தனது இன்றைய பணிகளை ரத்து செய்துவிட்டு கோவிலுக்கு விரைந்துள்ளார். காயம் அடைந்துள்ளவர்கள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, கொல்லம் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து என் இதயத்தை உலுக்கிவிட்டது. இந்த விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பலியானவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
மேலும் கேரள கோவில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.