மட்டக்களப்பு படுவான்கரை கோயில் போரதீவு பிரதான வீதியில் பயணிகளை ஏற்றிசென்ற முச்சக்கர வண்டி வீதியில் நின்றுகொண்டிருந்த கட்டாக்காலி மாட்டுடன் மோதுண்டு குடைசாய்ந்துள்ளது.
காந்திபுரத்திலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருக்கும்போது கட்டாக்காலி மாடுகளை முந்திச்செல்ல முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பயணித்த மூவர் சிறிய காயங்களுடன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளனர்.