பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பயணிகள் வசதிக்காக சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன் விவரம் வருமாறு:- சென்னை எழும்பூரில் இருந்து 18 மற்றும் 25-ந்தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 06001) மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து 20 மற்றும் 27-ந்தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்படும் நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06002) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது. மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.