பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தினை அண்டிய பகுதியில் மோட்டார்க் குண்டு மீட்பு..

யாழ். வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் அண்டிய பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார்க் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ வல்லிபுரம் ஆழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

ஆலயப் பெருவிழாவை முன்னிட்டு அப்பகுதிப் பொதுமக்கள் இணைந்து நேற்றைய தினம் ஆலயத்தை அண்டிய பகுதிகளை   துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அங்கு  வெடிக்காத நிலையில் மோட்டார்க் குண்டொன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் இது தொடர்பில் பருத்தித் துறைப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதனையடுத்து அங்கு சென்ற  பருத்தித்துறைப் பொலிஸார் குறித்த மோட்டார்க் குண்டினை அங்கிருந்து அகற்றியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

ஆலயம்குண்டுபருத்தித்துறைமீட்புவல்லிபுரம் ஆழ்வார்
Comments (0)
Add Comment