மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி புதிய பிரதமரை நியமிக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஒன்றரை மாதங்களாக பிரதமராக செயலாற்றிய மஹிந்தவின் பதவி பறி க்கபடவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி தொடர் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி இந்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் தெரிவிகப்படுகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றம் கூடும்போது, புதிய பிரதமரை நியமிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்குவது என்பது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், புதிய பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
இதேவேளை . ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் பிரதமராக தாம் ஏற்றுக் கொள்ள போவதில்லை என ஜனாதிபதி அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது