பற்களை மீளுருவாக்கம் செய்யும் புதிய பதார்த்தம்

லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் பற்களினுள் செலுத்தப்பட்டு அவற்றை திருத்தம் செய்யக்கூடிய, மீளுருவாக்கம் செய்யக்கூடிய புதிய பதார்த்தம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

வழமையான அடைப்பான் போன்ற இது, பற்களினுள் செலுத்தப்பட்டு அதில் காணப்படும் பக்ரீரியாக்களால் உண்டாக்கப்படும் இடைவெளிகளை அடைக்கின்றது. இப் பதார்த்தம் பற்களினுள் செலுத்தப்பட்டு UV கற்றைகள் மூலம் வன்மையாக்கப்படுகிறது.

ஒரு தடவை இது பற்களினுள் செலுத்தப்பட்டதும், அவை மூலக் கலங்களை தூண்டி அவை பல் திசுக்களாக வளர உதவுகின்றன. வழமையாக இப் பதார்த்தங்கள் கல்சியம் ஜதரொட்சைட், Mineral Trioxide Aggregate (MTA) போன்றவற்றால் ஆக்கப்படுகின்றன.

இப் பதார்த்தங்கள் பற்களை பாதுகாப்பதை தவிர வேறொன்றும் செய்வதில்லை. அதோடு இவை 10 – 15 வீதம் வரையில் தோல்வியடைகின்றன. இதன்படி கண்டுபிடிக்கப்பட்ட இப் புதிய பதார்த்தம் இது போன்ற தீமைகளை கொண்டிருப்பதில்லை என்பதுடன் அவை இயற்கையான பல் இழைய வளர்ச்சியை தூண்டுகின்றன என்பது இன்னுமொரு நன்மை.

இளையம்திருத்தம்பதார்த்தம்பற்கள்மீளுருவாக்கம்லண்டன்விஞ்ஞானிகள்
Comments (0)
Add Comment