பலவந்தமாக வெளியேற்றப்படாமல் தானாகவே மஹிந்த ராஜபக்க்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகியதை தான் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மகிந்தவின் பதவிவிலகல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போதும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும், சமானத்தையும் ஏற்படுத்த தவறியதாகவும் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாக போரை வெற்றிக்கொண்ட உண்மையான ஹீரோவாக மகிந்தவால் முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்க்ஷ இன்று காலை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.