பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்ய 2 பில்லியன் ரூபா…

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் 2 பில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிராந்திய விமான நிலையங்களுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கான விமானப் பயணங்களை ஆரம்பிப்பதற்கான முதல் நடவடிக்கையாகவே, பலாலி  விமான ஓடுபாதை  அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

வடக்கு அபிவிருத்தி அமைச்சு, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை, விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த பலாலி விமான நிலையம்,  பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் திட்டம், சில  ஆண்டுகளுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டது.

பலாலி  விமான நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கு  கூட்டு அரசாங்கம் பதவியில் இருந்த போது இந்தியா உதவ முன்வந்த போதும்,  அது தொடர்பான இணக்கப்பாடுகள் எட்டப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், தற்போது, ஓடுபாதையை அபிவிருத்தி செய்ய இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதேவேளை   அனைத்துலக விமான நிலையமாக அதனை அபிவிருத்தி செய்வதற்கான உதவியை இந்தியாவிடம் கோருவதற்கும் இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாஇலங்கைசீரமைப்புபலாஇவிமானதளம்
Comments (0)
Add Comment