பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கான அனுமதி படிவங்கள் கோரல்

அடுத்த இரு வாரங்களில் பல்கலைக்கழகத்துக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்கள் கோரப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தள்ளது.

கடந்த வருடத்தைப் போன்று இம்முறையும் “ஒன்லைன்” (Online) முறையில் விண்ணப்பித்தல் மற்றும் பதிவு செய்தல் வசதி என்பன செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக நெனசல மற்றும் திறந்த பல்கலைக்கழகத்தினால் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையங்களின் உதவியை விண்ணப்பதாரிகள் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்துக்கு பிரவேசிக்கவுள்ள மாணவர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் எதிர்வரும் நாட்களில் பத்திரிகைகள் வாயிலாக அறிவிக்கப்படும் எனவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனுமதிகோரல்பல்கலைக்கழகம்புதியமாணவர்கள்வாரம்விண்ணம்
Comments (0)
Add Comment