பல்வேறு சர்ச்சைகளின் பின்னரும் தொடரும் உளவு இயந்திரம் பயன்படுத்தி கரைவலை இழுக்கும் பணி.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடியில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் பல்வேறு தடவைகள் பிரதேச , மாவட்ட  அபிவிருத்தி குழு  கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் மணித்தியாலக் கணக்கில் கதைக்கப்பட்டாலும் இன்றுவரை மீனவர்களுக்கான உறுதியான தீர்வுகள் கிட்டவில்லை.

சட்டவிரோத மீன்பிடி அத்துமீறிய தென்னிலங்கை மீனவர்களது வருகை என பல்வேறு பிரச்சனைகள் இதனைவிட உளவு இயந்திரத்தை பயன்படுத்து கரைவலை இழுக்கும் பணி நிறுத்தப்பட வேண்டுமென பல்வேறு கூட்டங்களில் தீர்மாணிக்கப்பட்டாலும்  இதுவரை நிறுத்தப்படவில்லை.

இந்த விடயத்தை நிறுத்துமாறு கோரியும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்றும் இந்த முறை தொடர்கிறது இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுள்ளது.

பிரச்சனைமீனவர்கள்மீன்பிடிமுல்லைதீவு
Comments (0)
Add Comment