தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் புல்மோட்டை பள்ளிவாசலுக்கு 5,00,000 ரூபா நிதி ஒதிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழர்களின் தலை நகரமான திருகோணமலையில் தற்போது, இந்து ஆலயங்களின் பராமரிப்பு கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், அங்கு சிங்களக் குடியேற்றங்களும், பௌத்த மதத்தின் ஆக்கிரமிப்புக்களும் அதிகரித்துள்ளது.
எனினும் அதனைப் பாதுகாப்பதற்கும், அழிந்துவரும் மரபுரிமைகளை மீட்டெடுக்கவும் தமிழர் தரப்பு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் புல்மோட்டை பள்ளிவாசலுக்கு 5,00,000 ரூபா நிதி ஒதிக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
மேலும் இந்து மதத்தை முற்றிலும் ஆதரித்து செயற்படும் சம்பந்தன், தமிழர்களின் கலாசாரத்தை அழிக்க இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல்வாதிகளுடன் கூட்டணி வைத்து செயற்படுவது தமிழ் மக்களினதும், அவர்களின் நம்பிக்கை மீதும் அக்கறையற்றவராக செயற்படுவதாக மக்கள் மத்தியில் விசனம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.