பழ. கருப்பையா வீட்டை மர்மநபர்கள் தக்கியுள்ளனர்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பழ கருப்பையாவின் வீடு நேற்றிரவு மர்மநபர்களால் தாக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை கைது செய்தது காவல்துறை.

துறைமுகம் சட்டசபைத் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த பழ.கருப்பையா துக்ளக் ஆண்டு விழாவில் கட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து பேசினார். இதையடுத்து கடந்த புதன்கிழமை அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்த பழ.கருப்பையா மேலும் பல காட்டமான புகார்களை தலைமை மீது தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழ.கருப்பையாவின் வீட்டின் மீது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளனர். வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியெறிந்து சேதப்படுத்தினர்.

தாக்குதலிலிருந்து தப்பிக்க வீட்டின் வாசலில் இருந்த தனது மகன், விளக்குகளை அணைத்துவிட்டு, கதவை தாழிட்டதாகவும், இதனையடுத்து கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பழ.கருப்பையாவின் புகாரின் பேரில் போலீஷார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக இன்று ராமு, ராதாகிருஷ்ணன், அருண் என்கிற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதிமுககைதுதாக்குதல்நீக்கம்பழ.கருப்பையாமர்மநபர்கள்
Comments (0)
Add Comment