வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றக்கோரி பௌத்த பிக்குகள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் அரச அதிபர் மற்றும் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.
அவர்களை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாவிடின் வீதியில் இறங்கி பாரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பிக்குகள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், பாகிஸ்தானில் இருந்து இரகசியமாக அழைத்து வந்தவர்களின் விபரத்தை வெளியிடுமாறும், அவர்களை பார்வையிட அனுமதிக்குமாறும் பிக்குகள் கோரியுள்ளனர்.
இதேவேளை அவர்களூடாக ஐ.எஸ். உறுப்பினர்கள் நாட்டுக்குள் உள் நுழைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.