பாஜக ஆதரவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது – தமிழிசை

மக்கள் நலக்கூட்டணியில் தற்போது மக்கள் நலன் புறந்தள்ளப்பட்டு விஜயகாந்த் முன்னிறுத்தப்பட்டுள்ளதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி  அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.   வேட்பாளர் தேர்வு குறித்து  தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ், மாநில தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்,

தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சவுந்திரராஜன், வேட்பாளர் பட்டியல் நாளைக்குள் தயாராகிவிடும் என்று கூறினார். மேலும், தமிழகத்தில் பாஜக ஆதரவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது எனவும் தமிழிசை தெரிவித்தார்.

ஆட்சிஆதரவுதமிழிசைநலக்கூட்டணிநலன்பாஜகமக்கள்விஜயகாந்த்
Comments (0)
Add Comment