பாஜக தலைவர் அமித்ஷா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பாஜக தலைவர் அமித்ஷா மீது முசாஃபர்நகர் கலவரம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிஜ்னோரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முசாஃபர்நகர் கலவரம் குறித்து அமித் ஷா பேசியுள்ளார்.

அப்போது, நம்மை காயப்படுத்தியவர்களை தேர்தலில் பழிவாங்க வேண்டும்.அநீதி இழைத்தவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இதையடுத்து அமித் ஷா மீது, மக்களை வன்முறைக்குத் தூண்டியது (பிரிவு 153), குழுக்கள் இடையே மோதலை உருவாக்கியது (பிரிவு 125) ஆகிய பிரிவுகளின் கீழ் முசாஃபர் நகர் மாவட்ட பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும், இன்று நீதிமன்றத்தில் முசாஃபர் நகர் பொலிஸார் அமித் ஷாமீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்

அமித்ஷாகலவரம்குற்றப்பத்திரிகைசர்ச்சைக்குரியசெய்யப்பட்டுள்ளதுதலைவர்தாக்கல்பற்றிபாஜகபேசியமீதுமுசாஃபர்நகர்வகையில்வழக்கில்
Comments (0)
Add Comment