முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 39 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் 19 பேருக்கு பாடசாலை உபகரண தொகுதியும் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வடமாகாண சபை உறுப்பினர் ஆ புவனேஸ்வரன் அவர்களது வேண்டுகோளுக்கமைவாக தமிழ் கல்வி சேவை சுவிட்சர்லாந்து அமைப்பின் நிதியுதவியில் பெற்றுக்கொள்ளப்பட்ட இந்த பொருட்கள் இன்றைய தினம் உடையார்கட்டு பாரதி சனசமூக நிலைய கட்டிடத்தில் வைத்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
பாரதி சனசமூக நிலைய தலைவர் த சிவமாயஜெயம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஆ புவனேஸ்வரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் திருச்செல்வம் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அதிகாரி சுப்பிரமணியேஸ்வரன் ஓய்வு நிலை அதிபர் விக்னேஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை உபகரண தொகுதிகளையும் வழங்கி வைத்தனர்.