பாட்டாளி மக்கள் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு மவுனம் காப்பதாக ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஜி.கே மணி குற்றம்சாட்டினார். மேலும், பிரதமர் மோடி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆந்திராஆர்ப்பாட்டம்கட்சிகண்டனம்கொலைசார்புசுட்டுசென்னைதமிழர்பாட்டாளிமக்கள்
Comments (0)
Add Comment