பாதிக்கப்பட்டிருந்த 210 மெகாவாட் மின் உற்பத்தி சீரடைந்துள்ளது

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 2-ஆவது யூனிட்டில் மின் உற்பத்தி இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால், கடந்த மூன்று நாட்களாக பாதிக்கப்பட்டிருந்த 210 மெகாவாட் மின் உற்பத்தி சீரடைந்துள்ளது.

கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 25-ஆம் தேதி மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 2-ஆவது யூனிட்டில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

கடந்த 3 நாட்களாக பழுதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. பணி முழுமையடைந்து இன்று காலை 7 மணி முதல் வழக்கம் போல இரண்டாவது யூனிட் செயல்பட தொடங்கியது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகின்றன.

அனல்கொதிகலன்சீரடைந்துள்ளதுநிலையம்பழுதுமின்மேட்டூர்யுனிட் உற்பத்தி மெகாவெட்
Comments (0)
Add Comment