பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு, 2016 -ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2017 ஆம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டம் பாமக அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள மாங்கனி அரங்கில் வரும் 30 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பொதுக்குழு நடைபெறும்.
கட்சியின் தலைவர் ஜி.கே.மணி பொதுக்குழுவுக்கு தலைமை வகிப்பார். நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.
பாமக மாநில மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்ள உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.