ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் பாம்பன் பாலம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
பாம்பன் பாலத்தில் 60 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் புறப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது