வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர், பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகொடுத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 6 மாத காலமாக மாணவிகளிற்கு தொல்லை கொடுத்துவந்த நிலையில் குறித்த ஆசிரியரை தெல்லிப்பழைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பெற்றோர் சிலர் முறைப்பாடு செய்ததை அடுத்து ஆசிரியரை கைது செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதோடு பாதிக்கப்பட்ட மாணவிகள் 8 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.
மேலும் குறித்த விவகாரம் தொடர்பில் பாடசாலையின் அதிபருக்கும், பெற்றோருக்கும் இடையில் நேற்றைய தினம் கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது