பா.ஜ.கவுடன் எவரும் கூட்டணிக்கு வரலாம் – இல.கணேசன்

பாரதிய ஜனதாவோடு கூட்டணி அமைக்கமாட்டோம் என எந்த கட்சியும் கூறவில்லை என்றும், எவர் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் எனும் சூழல் இருப்பதாகவும் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.

விருதுநகரில் பாராதிய ஜனதா கட்சியின் மதுரை பெருங்கோட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்து கொண்டார். கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

பின்னர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசும் போது:- தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கி அனுமதி கிடைத்ததற்கு பாரதப் பிரதமருக்கும் அந்த துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் , மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ள திமுக , அதிமுக.பி.ஜே.பி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளது.

அதனால் மக்கள் நலக் கூட்டணியில் இல்லாத மற்ற கட்சிகள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளும் , பாரதப் பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாளன்று பாகிஸ்தான் சென்று வந்த பின்னர் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தற்போது நல்ல நட்புறவு வளர்ந்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அமைதி நிலவ வேண்டும் , வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நல்ல கூட்டணி அமையும் , தமிழகத்தில் திமுக ,அதிமுக கட்சிகள் மக்களுக்கான நலத்திட்டத்தில் முழுக்கவனம் செலுத்தவில்லை, பாரதிய ஜனதாகட்சி வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சு வாhத்தை நடத்தி உள்ளது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தள்ளது. வருகிற தைமாதம் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று கூறினார்.

அமைக்கமாட்டோம்இல கணேசன்கூட்டணிஜனதாபாரதிய
Comments (0)
Add Comment