பாரதிய ஜனதா அரசின் ஊழல் எதிர்ப்பு முழக்கம் அதன் ஓராண்டு முடிந்த நிலையிலேயே கலைந்து விட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
லலித் மோடி மீது அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அவருக்கு மத்திய அமைச்சர் உதவி செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் லலித் மோடியின் வழக்கறிஞரிடம் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பணியாற்றுவதால் அவருக்கு உதவி செய்துள்ளதாக இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் மகனும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான துஷ்யந்த் சிங் நடத்தும் நிறுவனத்தின் 10 ரூபாய் மதிப்புள்ள பங்குகளை பன்மடங்கு விலை கொடுத்து லலித் மோடி வாங்கியுள்ளதாக இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
வசுந்தரா ராஜேவின் மகனுக்கு லலித் மோடி செலுத்திய இந்தத் தொகைக்கு கைமாறாக அவருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் என்னென்ன என்றும் இளங்கோவன் வினா எழுப்பியுள்ளார்.