பா.ஜ.க ஆதரவின்றி யாரும் ஆட்சியமைக்க முடியாது!

பாரதீய ஜனதா கட்சியின் மதுரவாயல் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது, தமிழகத்தை சுத்தம் செய்ய வந்த கட்சி பா.ஜ.க. தான். சுஷ்மாசுவராஜ் பயணம் நாடகம் என்று வைகோ கூறியுள்ளார். எப்போதும் நாடகம் நடத்தி கொண்டிருக்கும் வைகோவுக்கு எல்லாமும் நாடகமாகத்தான் தெரிகிறது.

வெளியுறவுத்துறை மந்திரி சரியான வெளியுறவு கொள்கையை நிலைநிறுத்தி விட்டு வந்துள்ளார். அதை நாடகம் என்று சொன்னால் வைகோவின் பார்வைக்கு உண்மை எது என்று தெரியவில்லை, அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை, அவரின் அங்கீகாரத்திற்காகவும் நாங்கள் காத்திருக்கவும் இல்லை’.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்சியமைக்கஆதரவின்றிபா.ஜ.கமுடியாதுயாரும்
Comments (0)
Add Comment