மக்களிடம் மிகவும் பிரபல்யமாகியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி உள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தொகுத்து வழங்குகிறார்.
கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனனும் இதில் கலந்துகொண்டு இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
வார இறுதி நாட்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து செல்ல மோகன்லாலுக்கு ரூ.12 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக மொத்தம் ரூ.45 கோடி செலவு செய்துள்ளனர் என்கிறார்கள்.
இதேவேளை மோகன்லால் மலையாள படத்தில் நடிக்க ரூ.3.50 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்ற குறிப்பிடத்தக்கது.