பிரணாப் முகர்ஜியை நரேந்திர மோடி டெல்லியில் சந்தித்துப் பேசினார்

ஜம்மு காஷ்மீர் பேரழிவு தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு குறித்து குடியரசுத் தலைவரிடம் மோடி விவாதித்துள்ளார்.

மேலும் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பிரச்னைகள் குறித்தும் இருவரும் விவாதித்தாகக் கூறப்படுகிறது. மோடியின் ஜப்பான் பயணம், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்டுடன் இந்தியா மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவற்றின் பின்னணியில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. எனினும், இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகையோ அல்லது பிரதமர் அலுவலகமோ எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.

காஷ்மீர்குடியரசுத்சந்தித்துப்ஜம்முடெல்லியில்தலைவர்தொடர்பாகநரேந்திரபிரணாப்பிரதமர்பேசினார்பேரழிவுமுகர்ஜியைமோடி
Comments (0)
Add Comment