பிரதமரின் பாதுகாப்பு செயலாளராக ராதாகிருஷ்ண கினி நியமனம்

பிரதமரின் பாதுகாப்பு செயலாளராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ண கினி நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் பாதுகாப்பு செயலாளராக இருந்து வரும் மலேய் குமார் சின்ஹா அடுத்த வாரம் ஓய்வு பெறுவதையடுத்து, தேசிய குற்றப்பதிவுகள் துறையின் தலைமை இயக்குநராக பதவி வகித்து வரும் பிகார் மாநிலத்தின் 1981-ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த ராதாகிருஷ்ண கினி புதிய செயலாளராக (பாதுகாப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு நவம்பரில் இப்பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பாதுகாப்பு செயலாளர் வசம்தான் உள்ளது. இவர்தான் சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) நிர்வாக தலைவராகவும் பணியாற்றுவார்.

ஐபிஎஸ் அதிகாரிபாதுகாப்பு செயலாளர்பிரதமர் மோடிமலேய் குமார் சின்ஹாராதாகிருஷ்ண கினி
Comments (0)
Add Comment