சர்ச்சைக்குரிய பிரதமராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மஹிந்த பிரதமர் செயலகத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.
இதேவேளை ரணில் விக்ரமசிங்க தற்போதும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் தங்கியிருக்கின்றார்.
ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சியினர் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை தவறாக பயன்படுத்துவதாகவும்,
அதற்கு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.