பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உருவாக்க சிங்கப்பூர் உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளது.சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் கே.சண்முகம் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக உரையாடினார்.
2006ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்குவது குறித்து அறிந்துக்கொள்ள குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, தொழில் அதிபர் குழுவை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார் என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது