பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா தமிழகம் வர உள்ளனர்’

தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி, அப்படியே நீடிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா ஆகியோர், விரைவில் தமிழகம் வர உள்ளனர்’ என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

பா.ஜ., மேலிட வட்டாரங்கள் கூறியதாவது:பா.ஜ.,வுக்கு, தேசியத் தலைவராக, அமித் ஷா பொறுப்பேற்றுள்ளார். அது குறித்த முறையான பதவியேற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும், 9ம் தேதி நடக்கும் இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய தலைவர்கள், பங்கேற்கவுள்ளனர்.

தமிழகம் மற்றும் கேரளா போன்ற தென் மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்த, முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிய தலைவர் அமித் ஷாவின் அடுத்த கட்ட திட்டமே, தமிழக அரசியலில் முக்கிய பங்கை பா.ஜ., வகிக்க வேண்டுமென்பது தான். அதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ., தலைவர் அமித் ஷாவும், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அமித் ஷா, வெகு விரைவில், தமிழகத்துக்கு வரவுள்ளார். இது தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

அமித் ஷாஆகியோர்தமிழகம்தலைவர்நரேந்திரபா.ஜ.பிரதமர்மோடிவர உள்ளனர்விரைவில்
Comments (0)
Add Comment