பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சீனத் தூதுவர் செங்யுவான் அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திபின்போது , சீனா மற்றும் இலங்கைக்கு இடையில், பொருளாதாரம், சுற்றுலா, கலாசாரம், மற்றும் தீவிரவாத முறியடிப்புத் துறைகளில் ஒத்துழைத்துச் செயற்படுவது தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு ஆசிய நாகரிகங்களின் மாநாடு தொடர்பாகப் பிரதமருக்கு விளக்கமளித்துள்ள சீனத் தூதுவர் , குறித்த மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதியும், சீன அதிபரும் நடத்திய பேச்சுக்கள் பயனுள்ளவையாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இரு நாடுகளும் இணைந்து முன்னெடுக்கும் திட்டங்களுக்குத் தொடர்ந்தும் ஆதரவு வழங்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் ரணில் சீனத்தூதுவரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.