பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
8 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
7 மற்றும் 8வது தளங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது தீ காயங்களுடன் மீட்கப்பட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.