பிரிட்டனில் மாதந்தோறும் 60 வங்கிகள் மூடப்படுகின்றன..

இங்கிலாந்தில் உள்ள   மக்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமே அனைத்து பரிமாற்றங்களையும் செய்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் வங்கிக்கு செல்வது வெகுவாக குறைந்து வருகின்றதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  பிரிட்டனில். 2015-ல் இருந்து 2018 வரை 3 ஆண்டுகளில் மட்டும் 2900 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இப்போது மாதந்தோறும் 60 கிளைகள் வரை மூடப்பட்டு வருகின்றதாகவும், . இதே நிலை நீடித்தால் கிளைகளை மூடுவதின் வேகம் இன்னும் அதிகரிக்கும் என்றும்  கூறப்படுகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்தின் முன்னணி வங்கியான நாட்வெஸ்ட் மட்டுமே 635 கிளைகளை மூடி இருக்கிறது.

அதோடு எச்.எஸ்.பி.சி. வங்கி 440 கிளைகளையும், லாய்ட்ஸ் வங்கி 366 கிளைகளையும் மூடி இருக்கின்றன.

இதேவேளை ஆன்லைன் வங்கி நடைமுறை வந்ததற்கு பிறகு பல நாடுகளிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன்இங்கிலாந்துமூடல்வங்கிகள்
Comments (0)
Add Comment