பிரித்தானியாவில் வாழும் 14 வயதுடைய பெண்பிள்ளைகளில் ஐந்தில் ஒருவர் தம்மைத்தாமே காயப்படுத்துகின்றனர் -அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை ..

பிரித்தானியாவில் வாழும் 14 வயதுடைய பெண்பிள்ளைகளில் ஐந்தில் ஒருவர் தம்மைத்தாமே காயப்படுத்துவதாக புதியஆய்வறிக்கை ஒன்றி  பதெரிவிகபப்ட்டுள்ளது.

சிறார்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த ஆய்வின்  அடிப்படையில் 14 வயதில்; 22 வீத சிறுமிகளும் 9 வீத சிறுவர்களும் தம்மைத்தாமே காயப்படுத்திக்கொள்வதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிழ்சியற்றவாழ்வு மற்றும் அழுத்தங்களால் 14 வயது சிறார்கள் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் சுவர்களில்முட்டிமோதி தம்மைத்தாமே காயப்படுத்துவது,

கூரிய பொருட்களால் கீறிக்கொள்வது, தீயில் சுட்டுக்கொள்வது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடுவதாகவும் குறித்த  அறிக்கை சுட்டிகாட்டியுள்ளது.

மேலும் விரக்திகொள்வது, கேலிக்கு ஆளாவது, பாடசாலை அழுத்தங்கள், உணர்வுகள் புறக்கணிக்கப்படுவது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் உள்ள புரிந்துணர்வு பிரச்சனைகளால் இந்த நிலைமைக்கு அவர்கள் ஆளாவதாக  ஆய்வில் தெரியவந்துள்ளமை  குறிப்பிடப்த்தக்கது.

ஆய்வுசிறார்கள்தகவல்பிரித்தானியாபெண்கள்
Comments (0)
Add Comment