பிரேசில் நாட்டில் உள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டு, அங்கிருந்து திடீரென வெளியேறிய சேற்று வெள்ளத்தில் சிக்கிய 200 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
பிரேசிலின் தென்கிழக்கே உள்ள மினால் கெராய்ஸ் எனுமிடத்தில் இரும்பு மற்றும் தாது சுரங்கத்தை ஒட்டிய அணையில் ஏற்பட்டுள்ளது.
இந்த உடைப்பால்அணையில் இருந்த சேறு பாய்ந்து அங்கிருந்த கிராமத்தில் உள்ள வீடுகளை மூழ்கடித்தது.
இந்நிலையில் சாலைகளில் ஓடிய சேற்று வெள்ளம் கட்டடங்களையும் சாலைகளையும் விழுங்கிக் கொண்டே செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
இந்த அனர்த்தத்தினால் சுமார் 200 பேரை காணவில்லை என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை அவர்கள் மணலில் புதையுண்டு போயிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.