பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அடிதடி! ஒருவர் பலி

மஹரகம – நீலம்மஹர பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற பிறந்தநாள் விருந்துபசார நிகழ்வின்போது ஏற்பட்ட மோதலில் 26 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த போகுந்தர பிரதேசத்தைச் சேர்ந்த மதுச தேசாரங்க என்ற இளைஞரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இளைஞர்கொண்டாட்டம்படுகாயம்பலிபிறந்த நாள்போகுந்தரபோலீஸ்மோதல்விசாரணைஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment