பீகாரில் பள்ளிக் குழந்தைகளின் படகு கவிழ்ந்து விபத்து! 15 குழந்தைகளை காணவில்லை

தொடர் மழை, வெள்ளம் என தொடர்ந்து பீகார் மாநிலம் இயற்கையின் சீற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. வெள்ளம் காரணமாக சுமார் 120-க்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.

மேலும் பலர் வெள்ளத்தினால் வீடு, வாசல்களை இழந்து பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலம் அவுரங்காபாத் அருகேயுள்ள புன்புன் நதியில் இன்று படகு கவிழ்ந்தது.

அதில் பயணம் செய்த பள்ளிக் குழந்தைகள் உட்பட சுமார் 15 பேர் மாயமாகினர். அவர்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தேடுதல் மற்றும் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்தியாகுழந்தைகள்சீற்றம்தண்ணீர்படகுபீகார்மழைமீட்புப் பணிவிபத்துவெள்ளம்
Comments (0)
Add Comment