பாட்னா புறவழிச்சாலையில் உள்ள கிடங்கில் ஊழியர்கள் சிலிண்டர்களை லாரியிலிருந்து இறக்கிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹெரிவிக்கபட்டுள்ளது.
450 சிலிண்டர்கள் வரை இருந்த அந்த லாரியில், ஒரு சிலிண்டர் மட்டும் கை தவறி விழுந்து உருண்டு, ஏற்கெனவே சூடாக இருந்த லாரியின் சைலன்சரில் பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அந்த சிலிண்டரும், லாரியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களும் வெடித்துச் சிதறி பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அருகில் இருந்த ரசாயனக் கிடங்கிலும் தீ பரவியுள்ளது.
6 தீயணைப்பு வாகனங்களில், தேசிய பேரிடர் மீட்புப் படையுடன் சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்துள்ளனர்.
இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.