பீருக்கு போட்டியாக கோகோ கோலா மதுபானம்

கோகோ கோலா குளிர்பான நிறுவனம் தற்போது மதுபானத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மது பானம் எலுமிச்சை மணத்துடன் இருப்பதுடன் அதில் ஆல்கஹாலின் அளவு 3 முதல் 8 சதவீதம் வரை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ஜப்பானில் விற்பனையாகும் குறித்த  மதுபானம் ஜப்பானின் சூ கி ( நிறுவனத்துடன் இணைந்து விற்பனையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

போட்டி

இதேவேளை பீருக்கு போட்டியாக குறித்த மது பானம் விற்பனையில் இருக்கும் என தெரிவித்துள்ள கோகோ கோலா நிறுவனம் , ஜப்பானுக்கு வெளியில் இந்தப் பானத்தை விற்க திட்டம் எதுவும் இல்லை எனவும்   தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோகோ கோலாஜப்பான்பீர்மதுபானம்
Comments (0)
Add Comment