புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு….

இலங்கையின்  புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவியேற்க உள்ளதாக   ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் புதிதாக நியமிக்கப்படும் 30 அமைச்சர்களின் பட்டியல் ஜனாதிபதிக்கு நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்றையதினம் நிதி அமைச்சர் உள்ளிட்ட 15 தொடக்கம் 20 வரையான அமைச்சர்கள் பதவியேற்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  சட்டம் ஒழுங்கு அமைச்சர் தொடர்பாக இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும், எஞ்சிய அமைச்சர்கள் அடுத்த சில நாட்களில் பதவியேற்பார்கள் எனவும்  அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றுபதவியேற்புபுதிய அமைச்சரவை
Comments (0)
Add Comment