புதிய அரசாங்கத்தின் கல்வி இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் …

புதிய அரசாங்கத்தின் கல்வி இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன்  இன்று பதவியேற்றுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் இன்று (21) மாலை 06.00 மணியளவில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்டுள்ளனர்.

இதன்போதே விஜயகலா மகேஸ்வரனும்   அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் 29 பேர் நேற்று  ஜனாதிபதி  முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டநிலையில்,

இன்று மாலை இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.

இதேவேளை  ரணிலின் கடந்த கால அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன்  விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக பதவி நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

ஜனாதிபதிபிரதியமைச்சர்கள்விஜயகலா மகேஸ்வரன்
Comments (0)
Add Comment