வடமாகாண சபையின் ஆட்சி இன்றுடன் நிறைவடையும் நிலையில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் தொடர்பாக இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் மக்கள் பேரவையின் மிக முக்கியமான கூட்டம் ஒன்று இன்று காலை நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் ஆரம்பமாகியிருந்தது.
இந்த நிலையில் குறித்த கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
இதேவேளை முதலமைச்சரின் இந்த அறிவிப்பின் பின் யாழ். அரசியலில் பல திடீர் திருப்பங்கள் காத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.