இதன் காரணமாகவே iPad 1, 2,3,4 மற்றும் iPad Air,2 என ஏராளமான வகைகளை Apple நிறுவனம் அறிமுகம்படுத்தியது. கடைசியாக கடந்த நவம்பர் மாதம் தனது iPad Pro model ஐ அறிமுகப்படுத்தியது Apple நிறுவனம்.
ஆனால் அதன் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் தற்போது அடுத்த model iPad Air 3யின் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள Apple நிறுவனத்தின் செய்தியாளர்கள் நிகழ்வின் போது இதை அறிமுகப்படுத்தவுள்ளது என்றும் கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்களை கவர இந்த புதிய iPadல் நவீன வசதிகள் புகுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மிகவும் துல்லியான வீடியோக்களை பார்க்க உதவும் 4K வசதியுடன் இந்த model வெளிவரவுள்ளதாக யூகங்கள் நிலவுகின்றன.
இதனுடன் 4GB Ram, LED Flash வசதியுடன் கூடிய பின்புற Camera ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் iPad Air 3 உடன் Iphone 5Se, Apple watch ஆகியவையும் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.