புதுக்குடியிருப்பு பிரதேசசபை கிணற்றுக்குள் இருந்து எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 அடிகள் ஆழம் கொண்ட கிணற்றில் இருந்து மக்களுக்குக் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது வறட்சியால் கிணற்றின் நீர் வற்றியுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் கிணற்றைத் துப்புரவாக்கும் நடவடிக்கைகள் பிரதேச சபைப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது கிணற்றில் இருந்த நீர் முற்றாக இறைக்கப்பட்டு மண் அகழப்பட்டதபோது 5 எறிகணைகள் தென்பட்டுள்ளன.
இதனை அடுத்து துப்புரப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டுப் புதுக்குடியிருப்புப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் எறிகணைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னடுத்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.