நிலத்தின் கீழ்பதுக்கி விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 1 3 0 பக்கற் கசிப்புடன் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பத்தாம் வட்டாரம் பகுதியில் மண்ணுக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1 3 0 பக்கற் கசிப்புடன் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆலோசனைக்கமைய பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பக்கற்று ஒவ்வொன்றும் நூறு ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்யப்பட்டவரை இன்று நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.