முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி கோட்டத்தில் திம்பிலி பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திம்பிலி ஆரம்பபாடசாலை மாணவர்கள் 19 பேருக்கான துவிச்சக்கர வண்டிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன
வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது 2018 ம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து குறித்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன
திம்பிலி ஆரம்ப பாடசாலை அதிபர் திரு சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அதிகாரி திரு சுப்பிரமணியேஸ்வரன் குறித்த பகுதி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பாரதிதாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு துவிச்சக்கர வண்டிகளை வழங்கிவைத்தனர்.