முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்ப்பட்ட முறுகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள் ஒன்றுகூடி சிரமதானப்பனியில் ஈடுபட்டனர்
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் நடைபெற்ற ஐந்தாவது சபை அமர்வின் போது உறுப்பினர் மு முகுந்தகஜன் அவர்களால் பிரதேச சபை உறுப்பினர்களாகிய நாம் ஒன்றிணைந்து முக்கியமான இடங்களில் சிரமதான பணி உள்ளிட்ட சேவைகளை செய்து மக்களுக்கு முன்மாதிரியாக செயற்படுவோம் என்ற கருத்தை முன்வைத்தார்
இதனை தொடர்ந்து சபையில் உள்ள அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த விடயம் நிச்சயமாக செய்யப்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வட்டாரங்களின் சுகாதார மேம்பாடு கருதி சபை உறுப்பினர்களால் சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது என்ற தீர்மானத்தை எடுத்தனர்
அதனடிப்படியில் இன்றைய தினம் திருமுறிகண்டி ஆலய சூழலில் துப்புரவு நட வடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இவ்வேலைத்திட்டத்தில் பிரதேசசபை தவிசாளர் செ.பிறேமகாந்த் மற்றும் உறுப்பினர்கள் வர்த்தகர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்
இதன்போது வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு கழிவகற்றல் தொடர்பான ஆலோசனைக்கருத்துக்கள் வழங்கப்பட்டதுடன் ஆலய வளாகத்தின் சுகாதார நிலைபற்றியும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருமுறிகண்டி ஆலய பொது மலசலகூடத்தின் புணரமைப்பு வேலைகளையும் பார்வையிட்டிருந்தனர்.